பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திருவண்ணாமலையில், நாலு வயது சிறுமியை; பாலியல் பலாத்காரம் செய்த... அரசு பள்ளி ஆசிரியர் கைது... கொடூர சம்பவம்..!
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நான்கு வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்டம் போளுர் அருகே சேத்பட் பகுதியை சேர்ந்த நான்கு வயது குழந்தை வீட்டின் அருகே இருக்கும் ஸ்ரீசாந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகின்றார். இந்த பள்ளியை சேத்பட் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மனைவி பிரபாவதி நடத்தி வருகிறார்.
மேலும் காமராஜ் என்பவர் சேத்பட் அருகில் உள்ள உலகபட்டு கிராமத்தில் இருக்கும் அரசுபள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி பிரபாவதி நடத்தும் சாந்தா வித்யாலயா பள்ளிக்கு அடிக்கடி காமராஜ் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் அந்த பள்ளியில் யூ.கே.ஜி. படிக்கும் நான்கு வயது பெண் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கபட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து அந்த நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது சிகிச்சையில் தெரியவந்தது. இதனால் குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு, நான்கு வயது சிறுமியிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ஸ்ரீ சாந்தா வித்யாலயா பள்ளி தலைமையாசிரியை பிரபாவதியின் கணவர் காமராஜ் அந்த குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து குழந்தையை, பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
உடனே இந்த சம்பவம் குறித்து போளுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பிரபாவதி சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினார். மேலும் தலைமறைவான அரசு பள்ளி ஆசிரியர் காமராஜை திருச்செந்தூர் பகுதியில் காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.