குளிருக்கு மூட்டிய தீ துணியில் பற்றி மூதாட்டி பலி; நொடியில் நடந்த சோகம்.!!



in-theni-aged-woman-dies

தேனி மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டி பகுதில் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள், ஆதரவில்லாத முதியோர்கள் 60 பேர் வசித்து வருகிறார்கள். தேனியில் சில நாட்களாகவே பனி தாக்கம் இருக்கிறது. 

சம்பவத்தன்றும் பனியின் தாக்கம் தொடர்ந்த காரணத்தால், அங்கிருந்த காய்ந்த இலைகளை குவித்து நெருப்பு வைத்து குளிர்காய்ந்து இருந்தனர். அப்போது, மூதாட்டி அக்கம்மாள் (வயது 64) என்பவர் குளிர்காய்ந்தபடி இருந்தார். 

death

துணியில் தீப்பிடித்து சோகம்

அச்சமயம், திடீரென அவரின் துணியில் தீப்பிடித்து, உடலில் பரவி அலறித்துடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு நிகழ்ந்தது.

இதையும் படிங்க: இராமநாதபுரம்: முதலுதவி கிடைக்காமல் மருத்துவமனை வாசலில் பறிபோன உயிர்.. குடும்பத்தினர் கண்ணீர் கதறல்.! 

இந்த விஷயம் குறித்து விடுதி காப்பாளர் அல்லிநகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மீன்பிடிக்கச் சென்றவருக்கு தேனீக்கள் வடிவில் வந்த எமன்; பரிதாப பலி.!