#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த இந்திய அணி.! கெத்து காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்.!
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பந்து வீச்சில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்தடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா அணி தரப்பில் பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.