தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தபால் துறை தேர்வு ரத்து; ஓங்கி ஒலித்த தமிழக எம்பிக்களின் குரல்களுக்கு கிடைத்த வெற்றி.!
கடந்த 14 ஆம் தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவிக்கிளை போஸ்ட் மாஸ்டர், தபால் டெலிவரி செய்பவர்கள் போன்ற பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. திடீரென ஜூலை 12ம் தேதி மத்திய அரசு சார்பில் மாநில தபால் துறை அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அந்த சுற்றறிக்கையில் நடைபெறவுள்ள தேர்வுகளில் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்படும். மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படாது என்ற அறிவிப்பு வெளியானது. தேர்வு நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் இதுபோன்ற அறிவிப்பு வெளியானதால் தேர்வர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், தபால் துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும். ஆனால் தமிழே தெரியாத அவர்களைத் தமிழகத்தில் பணியமர்த்தினால் அவர்கள் தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து பணியாற்றுவார்கள்? இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது என பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்தனர்.
பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து இது தொடர்பாக குரல் கொடுத்தனர். மாநிலங்களவையில் திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் நவநீதி கிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இது குறித்து பேசும்போது: கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு விரைவில் ரத்து செய்யப்படும். மீண்டும் தேர்வானது விரைவில் நடத்தப்படும். தமிழ் மட்டுமல்லாது இதர அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதால் தேர்வர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.