#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாமன்னன் திரைப்படத்திற்கு தடையா.? வழக்கு விசாரணை ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் வருகின்ற 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மாமன்னன் 3 படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர் போட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். இந்தத் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் 29ஆம் தேதி என்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஏ. எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த ஏஞ்சல் திரைப்படத்தை முடிக்காமல் மாமன்னன் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என ஓடிஎஸ் ஃபிலிம் சார்பாக ராம் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தொடரப்பட்ட மனு சம்பந்தமாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இந்த வழக்கின் விசாரணை வருகின்ற 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.