#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றலாம்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த தலைவர்கள் பெயரை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுக்கும் பெயர் பெற்ற சாலை கிழக்கு கடற்கரை சாலை. தொடர்ந்து காலம் காலமாக ECR என்று படித்து வந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு பெயர் எதற்கு? எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன அதற்கு அந்த பெயரை வைத்து கொள்ளலாம்.
அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெறுகிறது. பொது மக்களே இதை விரும்ப மாட்டார்கள். கூடிய விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள் என தெரிவித்தார்.