#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அப்பவே இதை செய்திருந்தால் என் அக்கா இறந்திருக்கமாட்டாளே.. கதறி துடிக்கும் சிறுமி ஜெயஸ்ரீயின் தங்கை!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த சிறுமதுரை காலனியில் வசித்து வந்தவர் ஜெயபால். இவரது மனைவி ராஜு. இவர்களது மூத்த மகள் ஜெயஸ்ரீ. இவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஜெயபாலுக்கும் கவுன்சிலரான முருகன் மற்றும் கலியபெருமாள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயபாலை அடித்துள்ளனர். இந்நிலையில் முருகன் மற்றும் கலியபெருமாள் மீது புகார் அளிக்க ஜெயபால் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அவர்கள் பெட்டிக்கடையில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயின் வாயில் துணியை அமுக்கி, கை கால்களை கட்டி கடுமையாக அடித்துள்ளனர். பின்னர் பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளனர் .இதனைத் தொடர்ந்து சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசார் கலியபெருமாள் மற்றும் முருகன் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஜெயஸ்ரீயின் குடும்பமே பெரும் சோகத்தில் உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ஜெயஸ்ரீயின் தங்கை கூறுகையில், 8 வருடத்திற்கு முன்னாடி பிரச்சினை நடந்தப்போதே அவர்கள் மீது புகார் அளித்தபோது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இன்னைக்கு என் அக்கா இறந்திருக்கமாட்டாள். அவளை எரித்து கொன்று விட்டனர். கோடி ரூபாய் கொடுத்தாலும் என் அக்காவிற்கு ஈடாகுமா? என் அக்கா என் கூடவே இருக்கிறார். என் சாமி என் கூடவே இருக்கிறார் என கதறி துடித்துள்ளார். இது பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.