#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா ஸ்டாலின்.? அமைச்சர் அதிரடி கேள்வி.!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள பயணமாக சென்னைக்கு வருகை தந்த போது, திமுகவின் வாரிசு அரசியல் குறித்து விமர்சனம் செய்தார். இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், வாரிசு அரசியல் என்பது அதிமுக, பாஜக உள்பட அனைத்து கட்சிகளிலும் இருப்பதாகவும் ஆனால் திமுகவை மட்டுமே சுட்டிக் காட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறு இல்லை. என் மகனை அரசியலுக்கு கொண்டு வந்தது நான் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் என் மகனை அரசியல் களத்திற்கு அழைத்து வந்தார் என தெரிவித்தார்.
ஆனால் திமுகவில் தான் வழிவழியாக வாரிசு அரசியல் நடக்கிறது. அதிமுகவில் அப்படி இல்லை. அதிமுகவில் கொடி பிடித்தவர்கள் கூட முதல்வராக முடியும். திமுகவில் அப்படி முடியுமா? திமுக மூத்த நிர்வாகியான துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஸ்டாலின் தயாரா? உதயநிதியை அறிவிப்பாரே தவிர துரைமுருகனை அறிவிக்க மாட்டார் ஸ்டாலின் என தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.