#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குளிர் காய பார்த்தார்கள்.. எதிரிகளின் நினைப்பில் மண் விழுந்தது.! அமைச்சர் ஜெயக்குமார்
சமீப காலமாக அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் மாறி மாறிக் கருத்து தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்கின்ற கேள்விக்கு தீர்வு கிடைத்துள்ளது. அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அப்போது அமைச்சர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று பொன்னான நாளான புதனன்று அதிமுக தொண்டர்களும் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்த அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கு இன்று பதில் கிடைத்துள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் குளிர்காயலாம் என்ற எதிரிகளின் நினைப்பில் மண் விழுந்துள்ளது. அனைவரின் முழுமனதுடன் வழிகாட்டுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.