#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பு உள்ளதா.? அமைச்சர் ஜெயக்குமார் ஓப்பன் டாக்.!
அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முக்கிய தலைவர்களான ஜெயலலிதா இல்லாத அதிமுகவும், கருணாநிதி இல்லாத திமுகவும் மற்றும் பல புதிய கட்சிகளும் போட்டியிட உள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா சமீபத்தில் விடுதலையானார். வரும்தேர்தல் குறித்து சசிகலா பேசுகையில், எதிரிகளை வீழ்த்த அதிமுக ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனாலும் சசிகலா அவர்களுடன் கட்சியில் ஒன்றிணைந்து செயல்பட அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் விரும்பவில்லை.
இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த எழுச்சியை தற்போதும் காண முடிகிறது. எனவே 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். எனவே அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.