பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதுபான்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்ட போதிலும் இதுதொடர்பான குற்றங்கள் குறைந்தப்பாடில்லை.
இந்தநிலையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பிரசாத் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் கைதான பிரசாத் என்பவருக்கு 44 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.