#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்த மர்மநபர்கள்! போராட்டத்தில் குதித்த அதிமுக-வினர்!
புதுச்சேரி-விழுப்புரம் புறவழிச்சாலை வில்லியனூர் சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் இன்று மாலை காவி துண்டு அணிவித்துள்ளனர். இதனை அவ்வழியே சென்ற அதிமுகவினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சமீபத்தில் கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் இன்று மாலை காவி துண்டு அணிவித்த சம்பவம் நடந்துள்ளது.
எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காவி துண்டு அணிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வில்லியனூர் போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்க அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சிலை பீடத்தின் மீது ஏறி துண்டை அகற்றி விட்டு மாலையை அணிவித்து புறப்பட்டு சென்றனர்.