மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டூவீலர் அன்பர்களே கவனம்... இருக்கைக்கு அடியில் 2 அடி நீள விஷத்தன்மை கொண்ட விரியன் பாம்பு.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவர் தனக்கு சொந்தமாக இருசக்கர வாகனம் ஒன்றை வைத்துள்ளார்.
இதனிடையே, சம்பவத்தன்று இவர் தனது வேலைக்காக இருசக்கர வாகனத்தை எடுத்துச்சென்றபோது, பின் இருக்கையில் இருந்து பாம்பு ஒன்று தலையை நீட்டி இருக்கிறது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாகனஓட்டி, உடனடியாக தனது வாகனத்தில் இருந்து இறங்கி இருக்கிறார். பின் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கழிவறையா? பாம்புகளின் கூடாரமா? அதிர்ச்சியை தந்த செய்யாறு அரசு கலை கல்லூரி பெண்கள் கழிவறை.!
#Watch | திருக்கோவிலூர் அருகே துரைக்கண்ணு என்பவரின் பைக்கின் சீட்டுக்கு அடியில் 2 அடி நீள கட்டுவிரியான் பாம்பு இருந்ததால் அதிர்ச்சி!#SunNews | #Tirukovilur | #Snake pic.twitter.com/89Gi5YSf9B
— Sun News (@sunnewstamil) September 12, 2024
வீடியோ நன்றிSun news Tamil
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பாம்பை இலாவகமாக பிடித்து வெளியே விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 2 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு அவரின் இருக்கையில் இருந்துள்ளது. நல்வாய்ப்பாக பாம்பு யாரையும் தீண்டவில்லை. சிலமணிநேர போராட்டத்திற்கு பின் பாம்பு மீட்கப்பட்டது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியை சீரழித்து, நிறைமாத கர்ப்பிணியாக்கிய அத்தை மகன்; வீட்டிற்கு வந்துசென்றபோது துணிகரம்.!