மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கழிவறையா? பாம்புகளின் கூடாரமா? அதிர்ச்சியை தந்த செய்யாறு அரசு கலை கல்லூரி பெண்கள் கழிவறை.!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்படுகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். கல்லூரியில் பெண்கள் கழிவறை செல்லும் வழியில் புதர்மண்டி கிடக்கிறது.
இதனை தனக்கு சாதகமாக்கும் பாம்புகள், கழிவறைக்குள் புகுந்துவிடுகிறது என கூறப்படுகிறது. இதனிடையே, அலங்கோலமான கழிவறை ஒன்றில், பாம்புகள் கூட்டமாக இருக்கும் பகீர் காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியானது.
திருவண்ணாமலை செய்யாறு அரசு கலைக் கல்லூரி பெண்கள் கழிவறையில் பாம்புகள் நடமாட்டம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..! #Tiruvannamalai #GovtCollege #Toilet #Snacks #ShockingVideo #NewsTamil #Newstamil24x7 pic.twitter.com/bf7J5QZvBK
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 3, 2024
இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட முண்டியடித்த கூட்டத்தால் பரபரப்பு; திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பகீர்.!
இந்த வீடியோ பெற்றோர்களிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நெட்டிசன்களிடம் கண்டனத்தையும் குவித்து வருகிறது. இந்த விஷயம் குறித்து விளக்கம் அளித்துள்ள கல்லூரி முதல்வர், பாம்புகள் இருக்கும் கழிவறை மூடப்பட்டுள்ளது. அதனை அகற்றவும், புதர்களை களையெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார்.
இதையும் படிங்க: நீச்சல் குளத்தில் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்; 3 வயது சிறுவன் பரிதாப பலி.!