பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தங்கம் என நினைத்து மூதாட்டியிடம் கம்மலை பறித்த இளைஞர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.!
சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரமிளா. இவர் தனது சகோதரி தெய்வ சேனா என்பருடன் வசித்து வருகிறார். இதில் பிரமிளா அதிகாலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பிரமிளாவின் காதில் அணிந்திருந்த கவரிங் கம்மல் தங்கம் என நினைத்து பறித்து சென்றுள்ளார். இதில் மூதாட்டியின் காது கிழிந்து ரத்தம் கொட்டியது. இதனால் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் இளைஞர் அருகில் இருந்த பூந்தொட்டியை எடுத்து பிரமிளாவின் மண்டையில் அடித்து விட்டு தப்பி சென்றுவிட்டார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பிரமிளாவுக்கு காதில் 15 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து நெடுங்குன்றம் பகுதியில் கட்டுமான பகுதியில் ஈடுபட்டு வந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நசீம் என்ற இளைஞரை கைது செய்தனர்.
இவர் கட்டிட வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு வீடுகளுக்குள் புகுந்து திருடுவதை பழக்கமாக கொண்டுள்ளார். இவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்