பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சப்பாத்தி தராத அக்கா.. பசி தாங்காமல், வெறியில் சிறுமி செய்த செயல்.. கதறும் குடும்பம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலபெருவிளை பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பவருக்கு தங்க கனி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 4 மகள்கள் இருந்துள்ளனர். அவரது கடைசி மகள் பத்தாம் வகுப்பு மற்றும் மூன்றாவது மகள் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
மற்ற இரு பெண்களும் திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களது மகன் சென்னையில் வேலை செய்து வருகின்றார். கடந்த நவம்பர் 2ம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த 10 -ம் வகுப்பு சிறுமி அம்மாவிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது தாய், "சமையலறையில் இருக்கும் சப்பாத்தியை எடுத்து சாப்பிடு" என்று கூறியுள்ளார்.
சிறுமி சமையலறைக்கு சென்று பார்த்தவுடன் அங்கே அக்காவான 12ஆம் வகுப்பு சிறுமி சப்பாத்தியை சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளார். தனக்கும் கொஞ்சம் சப்பாத்தி கொடு என்று தங்கை கேட்டுள்ளார்.
ஆனால், கொடுக்காமல் மொத்தமாக அவரே சாப்பிட்டு விட்டார். இதனால் சிறுமி ஆத்திரமடைந்து தனது அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுமியின் அக்காவும், தாயும் சேர்ந்து கதவை தட்டி கூப்பிட்டு பார்த்தனர்.
பின்னர் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தபோது சிறுமி தற்கொலைக்கு முயற்சித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார்.