#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கல்லூரி மாணவி கற்பழிப்பு.. ஆ., வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்து, ஆசைக்கு இணங்க வற்புறுத்திய கொடூரம்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்தலை, அருமனை இடைக்கோடு பகுதியை சார்ந்த 19 வயது மாணவி, களியக்காவிளை பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பி.காம் 3 ஆம் வருடம் பயின்று வந்துள்ளார். அருமனையை அடுத்துள்ள மேல்பாலை குழியோல்விளை கிராமத்தை சார்ந்தவர் இராணுவ வீரர் சஜித்.
இராணுவ வீரர் சஜித் மாணவியின் ஆபாச விடீயோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், நீ எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறி மிரட்டி மாணவியை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த ஆபாச வீடியோவை தனது நண்பர்களுக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் சஜித்தின் நண்பர்களும் மாணவிக்கு தொடர்பு கொண்டு, நீ எங்களின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டி இருக்கின்றனர். இந்த காரணத்தால் பயந்துபோன மாணவி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் இராணுவ வீரர் சஜித், அவரது நண்பர்கள் ஜான் பிரிட்டோ, கிரீஸ், லிபின் ஜான் ஆகிய 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களை கைது செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இவர்களில் சஜித் மற்றும் கிரீஷ் இராணுவ வீரர்கள் என்பதால் தனி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ மற்றும் லிபின் ஜானை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.