பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
2 பெண் குழந்தைகளை கொலை செய்து, தாய் தற்கொலை.. மாமியாரை தேவாலயத்திற்கு., அதிரவைக்கும் பகீர் சம்பவம்.!
இரண்டு வயது மற்றும் ஆறு மாத பெண் குழந்தைகளை தண்ணீருக்குள் அழுத்தி கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்துகொண்ட பேரதிர்ச்சி சம்பவம் குழித்துறை அருகே நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை, கழுவன்திட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜெபாஷைன் (வயது 35). இவர் கேரளாவில் உள்ள திருவானந்தபும், வர்க்கலை சொகுசு விடுதியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த விஜி (வயது 27) என்பவருக்கும் - ஜெபாஷைனுக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
தம்பதிகளுக்கு பிரியா என்ற 2 வயது மகளும், ஆறு மாத பெண் குழந்தையும் இருக்கின்றனர். விடுமுறை நாட்களில் சொந்த ஊர் வந்து செல்லும் ஜெபாஷைன் தனது மனைவி, குழந்தைகள், தாயை பார்த்துவிட்டு மீண்டும் பணிக்கு சென்றுவிடுவார். இதனால் விஜி தனது மாமியார் ராஜம்மாளுடன் வசித்து வந்துள்ளார். ராஜம்மாள் தினமும் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்து வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
நேற்றும் வழக்கம்போல தேவாலயத்திற்கு சென்ற நிலையில், பிரார்த்தனை முடித்துவிட்டு மதிய வேளையில் ராஜம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் முன்புறம் உள்ள தண்ணீர் தொட்டியில் பேத்திகள் இருவரும் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், வீட்டிற்குள் சென்று பார்க்கையில் மருமகள் விஜியும் தூக்கில் தொங்கி பிணமாக இருந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட ராஜம்மாளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மார்த்தாண்டம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், விஜி தனது குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கவைத்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், விஜியின் கணவர் ஜெபாஷைனுக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, அவரும் ஊருக்கு வந்துள்ளார். தற்கொலைக்கு முன்னதாக விஜி தனது மாமியாரை மதியம் 3 மணியளவில் மீண்டும் தேவாலயத்திற்கு அனுப்பி வைத்த நிலையில், தனது தாயாருக்கும் தொடர்பு கொண்டு பேசிவிட்டு குழந்தைகளை கொலை செய்து, தன்னுயிரையும் மாய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.