#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடிக்க சரக்கு வாங்கினால் எதோ மிதக்கிறது - கன்னியாகுமரி குடிமகன் பாரை கொளுத்திவிடுவதாக மிரட்டல்.!
அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்கிய இளைஞர்கள், அதில் துகழ் மிதப்பதாக புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டு மிரட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் இரும்பிலி பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையில் மது குடிக்க வாலிபர்கள் மதுபானம் வாங்கியுள்ளனர்.
அப்போது, அதில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்குள் பெரிய அளவிலான துகழ் ஒன்று மிதந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாலிபர்கள், மதுபான கடையில் மதுபான பாட்டிலை திரும்பிக் கொடுத்துள்ளனர்.
ஆனால், ஊழியர்கள் அந்த பாட்டிலை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடிமகன், குவாட்டர் பாட்டிலை மிதக்கும் துகளோடு புகைப்படம் எடுத்து வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அதில் ரூ. 135 ரூபாய் கொடுத்து குவாட்டர் வாங்கினால் அதில் ஏதோ மிதக்கிறது. இதனை குடித்து சாக வேண்டுமா? இதேபோல் பாட்டில் வந்தால் பார் தீப்பற்றி எரியும் என்று ஆவேசத்துடன் பேசி உள்ளார்.