#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாளை என்ன நாள் தெரியுமா? ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் மிக முக்கியமான நாள்!
திருகுவளையில் உதித்து சென்னை மெரினாவில் மறைந்த கலைஞர் கருணாநிதியின் முதல் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்பட்ட உள்ளது. கடந்த வருடம் இதே நாட்களில் கடந்த ஒருவார காலமாக திமுக தொண்டர்கள் எழுந்துவா தலைவா எழுந்து வா தலைவா என ஆர்ப்பரித்தனர்.
இறுதியாக கலைஞர் அவர்கள் தீவிர உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். இந்நிலையில் கலைஞர் இறந்து சரியாக ஓராண்டுகள் நிறைவடைய உள்ளது. கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை அவரது தொண்டர்களும், தற்போதைய திமுக தலைவருமான ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சிலை திறப்பு விழா என கலைஞரை நினைவு கூற உள்ளனர்.