#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தேனிலவில் நண்டு சாப்பிட்ட புதுப்பெண் பலி; கதறலில் மணமகன்.. இப்படியா சோகம் நடக்கணும்?.!
கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் பொறியாளர் ஆவார். தினேஷ் குமாரின் மனைவி கிருபா.
தம்பதிகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு-கேரளா எல்லையில் இருக்கும் விடுதியில் தங்கி தேனிலவு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
File Pic
அப்போது, விடுதி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட நண்டு உணவை சாப்பிட்ட கிருபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மூச்சுத்திணறல் தொடர்ந்ததால் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருபா பரிதாபமாக உயிரிழக்க, காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.