பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பள்ளிக்கு லேட்டாக வந்த சிறுமி.. கூறிய காரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி.! கோவையில் கொடுமை.!
கோவை மாவட்டத்தின் மதுகரையில் வசித்து வரும் ஜெபராஜ் 39 வயது என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகின்றார். அவரது ஆட்டோவில் பள்ளி செல்லும் மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம். அதுபோல சம்பவ தினத்தில் 7ம் வகுப்பு சிறுமி ஒருவர் அவரது ஆட்டோவில் சென்றுள்ளார்.
பள்ளிக்கு செல்லாமல் பாலியல் தொல்லை
ஆனால், ஜெபராஜ் அவரை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்துள்ளார். இதனால், பயந்து போன அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். வெளியில் தெரிந்துவிடும் என்று பயந்து போன ஜெபராஜ் உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு வந்து பள்ளியில் விட்டு விட்டார்.
இதையும் படிங்க: பெயிண்ட் அடிக்க ஆள் வைத்த மாமனார்.. பலே வேலை பார்த்த நபர்.. மருமகள் கண்ட காட்சி.!
வகுப்பறையில் அழுத சிறுமி
மாணவி பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். மேலும், வகுப்பறையில் அவர் அழுது கொண்டே இருந்த காரணத்தால் ஆசிரியர்கள் அந்த சிறுமியிடம் என்ன ஏது என விசாரித்துள்ளனர். அப்போது, தனக்கு நடந்த கொடுமையை கூறி அந்த சிறுமி கதறி அழுதுள்ளார்.
புகாரளித்த பெற்றோர்
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுக்க சிறுமியை அழைத்துக் கொண்டு அவர்கள் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: "செல்போன் பாக்காதனு சொன்னது ஒரு குத்தமா.." இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.!! காவல் துறை விசாரணை.!!