பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முன்விரோதத்தால் சம்பவம்.. 6 பேர் கொண்ட இளைஞர் கும்பலால் வாலிபர் படுகொலை.!
முன்விரோதத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் ஓசூர் அருகே நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சொப்பட்டி கிராமத்தை சார்ந்தவர் மோகன் பாபு. இவருக்கும் - மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று தனியாக நடந்து வந்த மோகன் பாபுவை, 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தி தப்பி சென்றுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மோகன் பாபுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் மோகன் பாபுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மத்திகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மோகன் பாபுவை திலக் (வயது 22), மூர்த்தி (வயது 21), பவன் (வயது 22), ஹேம்நாத் (வயது 21), சுரேஷ் (வயது 22), ராகேஷ் (வயது 20) ஆகியோர் கொலை செய்தது அம்பலமானது.
தலைமறைவாக உள்ள 6 பேரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.