#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காவலாளியை கொன்று தனியார் ஹோட்டலில் பணம் கொள்ளை - ஓசூர் அருகே பயங்கரம்.!
ஓசூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவக காவலாளியை கொலை செய்த கும்பல், ரூ.17 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகரில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் இரவுநேர காவலாளியாக பணியாற்றி வருபவர் தாமோதரன்.
நேற்று இரவில் வழக்கம்போல உணவகம் மூடப்படும் வேளையில் தாமோதரன் தனது பணிகளை கவனித்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வந்த கும்பலொன்று தாமோதரனை குத்தி கொலை செய்துள்ளது.
பின்னர், உணவகத்தில் இருந்த ரூ.17 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
தாமோதரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.