மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெயிண்டரை கொலை செய்து தலையை துண்டித்து கோவில் வாசலில் வைத்துச்சென்ற பயங்கரம்.. ஓசூரில் பேரதிர்ச்சி.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், எலுவப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை பிரதீப்பின் தலை அங்குள்ள கோவில் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடல் கோவிலுக்கு அருகே இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள் பாகலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதீபுக்கு யாருடனும் முன்விரோதம் இருந்ததா? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? யார் அவரை கொலை செய்தனர்? தலையை துண்டித்து எதற்காக கோவில் வாசலில் வைத்து சென்றனர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.