#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உடன்படிக்கும் சக மாணவனை கத்தியால் சரம்வாரியாக தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்! அதிர்ச்சி சம்பவம்!
சென்னை பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியுடன் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அஷ்வின் என்ற மாணவரை கார்த்தி என்ற மாணவர் பட்டா கத்தியால் வெட்டியுள்ளார்.
சென்னை பல்லாவரம் அருகே தனியார் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர், அதே கல்லூரி மாணவரை பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டிய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. மேடவாக்கத்தைச் சேர்ந்த கார்த்தி என்ற மாணவர் சட்டக் கல்லூரியில் 5ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரும் வந்துள்ளார்.
ஏற்கெனவே கல்லூரியில் ஏற்பட்ட பிரச்னைகள் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக் அஸ்வினை பட்டா கத்தியால் சரம்வாரியாக வெட்டியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மாணவர்கள் கார்த்திக்கை மடக்கி பிடித்து அவரிடமிருந்து காந்தியை பிடுங்கியுள்ளனர்.
அங்கு நடந்த மோதலில் அஸ்வினுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தநிலையில் அஸ்வினை சென்னை பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பட்டப்பகலில் வெட்டவெளியில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.