#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சரக்கு வாகனமும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து...! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி!!
கோவை மாவட்டம் சூலூர் அருகே நிகழ்ந்த இந்த கோர விபத்த அரங்கேறியுள்ளது. ஈரோட்டில் இருந்து முட்டை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வாகனமும், கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும் சூலூர் அருகே உள்ள பைபாஸ் சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் சரக்கு வாகனத்தில் இருந்த முட்டைகள் சாலையில் சிதறியதோடு மட்டுமல்லாமல் கண்டெய்னர் லாரியில் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் கொட்டியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்தக் கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலையும் சரி செய்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்டெய்னர் லாரி முன்னாள் சென்ற வேறு ஒரு லாரியை முந்த முயற்சிக்கும்போது இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.