#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓடுங்க.. ஓடுங்க.. விபத்துக்குள்ளான லாரியில் இருந்து குடம் குடமாக சமையல் எண்ணெய் பிடித்துச்சென்ற மக்கள்..
விபத்துக்குள்ளான லாரியில் இருந்து மக்கள் குடம் குடமாக சமையல் எண்ணெய்யை பிடித்துச்சென்றனர்.
ஓசூரிலிருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று தர்மபுரி மாவட்டம் காடுசெட்டிப்பட்டி அருகே வந்துகொண்டிருந்த போது, லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான லாரி அருகிலிருந்த தாழ்வான விவசாய நிலத்தில் கவிழ்ந்தது.
இதனால் லாரியில் ஏற்றிவந்த சமையல் எண்ணெய் விவசாய நிலத்தில் கொட்ட ஆரம்பித்தது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள், உடனே தங்கள் வீடுகளில் இருந்த குடங்களை எடுத்துவந்து, லாரியில் இருந்து கீழே கொட்டியே சமயல் எண்ணெய்யை குடம் குடமாக பிடித்துச்சென்றார். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
பின்னர் விபத்து குறித்து அந்த பகுதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவப்பட்டதை அடுத்து, சம்பவம் நடந்த இதற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.