குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
காதல் விவகாரம்.. காதலனுடன் ஓட்டம் எடுத்த மகள்.. ஆத்திரமடைந்த தந்தையின் வெறிசெயல்.!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் போஸ்ட் மேன் வட்டம் பகுதியில் சிவா மற்றும் பாரதி தங்களுடைய மகள் அக்ஸயாவுடன் வசித்து வந்துள்ளனர். அதே பகுதியில் முருகனின் மகன் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய்யும் அக்ஸயாவும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
பின்னர் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதை பற்றி அறியாத பெற்றோர் அக்ஸயாவை காணவில்லை என்று அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக அக்ஸயா விஜயுடன் ஓடியது தெரியவந்த நிலையில் ஆத்திரமடைந்த அக்ஸயாவின் தந்தை மற்றும் அண்ணன் விஜயின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இதனால் விஜய் வீட்டார் ஜோலார்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க உதவினர். மேலும் விஜய் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்த அக்ஸாயாவின் தந்தை சிவா மற்றும் அண்ணன் அழகேசன் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.