#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலுக்கு எதிர்ப்பு... ஆலங்குடி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்.!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி குளக்காரன் தெருவை சேர்ந்த ஆனந்தன் என்ற வாலிபரும், கறம்பக்குடி-புதுக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த வெண்மணி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ஆனந்தன் மற்றும் வெண்மணி இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர். இது தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தஞ்சமடைந்த காதலர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து இருவரது குடும்பத்திற்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆலங்குடி காவல்நிலையம் வந்த அவர்களது பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து ஆனந்தன்-வெண்மணி ஆகிய இருவருக்கும் திருமண வயது கடந்து விட்டதால் அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.