#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலி எடுத்த விபரீத முடிவு, துடிதுடித்து மாண்ட காதல் ஜோடி..!!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நாரையூரணி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் கேசவன். இவரது மகன் செல்வேந்திரன் என்கின்ற அரவிந்த் இவருக்கு வயது 26. இவர் மேதலோடை கிராமத்தில் வசித்து வரும் யோகோவா என்னும் 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலிப்பது அவர்களது வீட்டிற்கு தெரிய வருகிறது.
இரண்டு பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், இரு வீட்டிலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் யோகோவா மிகவும் மனமுடைந்த நிலையில் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த செய்தி அறிந்த செல்வேந்திரன் அதிர்ச்சி அடைந்த நிலையில் தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை ரயில்வே கேட்டிற்கு அருகில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக்கொண்டு உள்ளார்.
பின்னர் அவ்வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் மிகவும் வேகமாக வந்து செல்வேந்திரன் மீது மோதியதில் அவரது தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தது. பின்னர் இருவரின் தற்கொலை குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.