டாஸ்மாக் கடைகளை ஏன் மூடவில்லை? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி; விரைவில் நடவடிக்கை பாயுமா?



madurai-high-court---tasmac-case

தமிழகத்தில் இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்புகிறது.

டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழக அரசுக்கு வருமானம் வந்தாலும் அதனால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்று தான் செல்ல வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மது அருந்துவது வாடிக்கையாகி வருவது அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலேயே அதிகமாக மது அருந்துவோர் தமிழகத்தில் தான் உள்ளனர் என்று சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவு வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களில்  டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழக அரசுக்கு வருமானம் 500 கோடியை தாண்டியது.

tasmac

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன இனி மூடப்படும் டாஸ்மாக் கடைகள் எவை எவை? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியது. 

இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மார்ச் 4 ஆம் தேதி வரும் மறுவிசாரணைக்கு முன் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் போது டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.