#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மத்திய அரசு வேலை வேணுமா?.. கோடிக்கணக்கில் நாமம் போட்ட மதுரை பாஜக மகளிரணி பிரமுகர்..!
பாஜகவில் மகளிரணி நிர்வாகி என கூறப்படும் பெண்மணி, பலரிடம் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானச்செல்வி. இவர் பாரதிய ஜனதா கட்சியில் மகளிரணி நிர்வாகியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வைத்து பலரிடமும் பழகிய நிலையில், நன்றாக பழகுவோரிடம் இரயில்வே உட்பட மத்திய அரசு பணிகளை வாங்கி தருவதாக ஏமாற்றி, 20 க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கியுள்ளார்.
மத்திய அரசு வேலையை காசு கொடுத்து வாங்கிவிடலாம் என எண்ணிய பலரும் அவரிடம் பணம் கொடுக்க, மொத்தமாக கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது. பணத்தை பெற்றுக்கொண்ட ஞானச்செல்வி வேலை வாங்கி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், அவரிடம் பணம் கொடுத்தவர்கள் வெளியில் விசாரித்த போது, அவரிடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த நபர்கள் உண்மையை தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரேணுகா தேவி என்பவர், திருப்பரங்குன்றம் காவல் நிலையம் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஞானச்செல்வியிடம் பணம் கொடுத்து ஏமாற்றத்தை சந்தித்தவர்கள், மதுரை ஆட்சியரிடம் புகாரும் அளித்துள்ளனர்.