#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
6 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி பாலியல் பலாத்கார முயற்சி.. 60 வயது முதியவர் கைது.. மதுரையில் பேரதிர்ச்சி.!
மதுரை நகரில் வசித்து வரும் 6 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமிக்கு, முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, குற்றவாளியை விசாரணை செய்து கைது செய்ய மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை மேற்பார்வையில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் துறை ஆய்வாளர் தீபா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. மதுரையில் உள்ள முத்துப்பட்டி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 60).
இவர் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வீட்டில் கடந்த 3 நாட்களாக பணியாற்றி வந்த நிலையில், அங்குள்ள வீட்டில் வசித்து வந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது வீட்டு வாசலில் நின்று விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, சிறுமியை கவனித்த முதியவர், அவரின் வாயை பொத்தி தனி அறைக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி காப்பாற்றக்கூறி அலறவே, பயந்துபோன மகாலிங்கம் சிறுமியிடம் நடந்ததை வெளியே கூற கூடாது, மீறி கூறினால் கொலை செய்திடுவேன் என மிரட்டி தப்பி சென்றுள்ளார்.
வீட்டிற்கு அழுதுகொண்டே சென்ற சிறுமி தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகையில், பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகவே, மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் மகாலிங்கத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.