#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலி இறந்த துக்கத்தில், விடுதியில் அறையெடுத்து காதலன் விபரீதம்..!
மதுரை மாவட்டத்தில் உள்ள தே. கல்லுப்பட்டி, ஈஸ்வரி பேரையூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு கார்த்திக் (வயது 21). இவரின் காதலி கடந்த மாதத்தில் உயிரிழந்த நிலையில், அதுதொடர்பான மன விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று பெரியமேடு தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்த பிரபு கார்த்திக், நேற்று இரவு நேரத்தில் தனது நண்பர்களுக்கு வாட்ஸப்பில் குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார். அந்த தகவலில், "நண்பர்களுக்கு நன்றி. அப்பா, அத்தை என்னை மாணிக்க வேண்டும்.
யாரையாவது நான் கஷ்டப்படுத்தி இருந்தால், என்னை மணித்திடுங்கள். அனைவரும் சந்தோசமாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார். வாட்ஸப்பில் செய்தியை அனுப்பியதும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பதறிப்போன நண்பர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியமேடு காவல் துறையினர் பிரபு கார்த்திக்கை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக மீட்டனர். அவரின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.