#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெற்றெடுத்த தாயின் வயிற்றில் மிதித்துக்கொன்ற மகன்.. கஞ்சா குடிக்கி போதையில் வெறிச்செயல்..!!
கஞ்சா போதையில் பணம் கேட்டு தாயை கடுமையாக தாக்கிய கஞ்சாகுடிக்கி, கட்டையால் மண்டையிலேயே அடித்து கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு அருகில் உள்ள குதிரைக்காரர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் பத்மினி (வயது 60). இவர் அதே பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பிவாங்கும் சங்கு, துப்பட்டா, மணி, துணி பை போன்றவற்றை சாலையோரம் விற்பனை செய்துவந்தார்.
இவரது இளைய மகன் முரளி (வயது 37). கஞ்சா போதைக்கு அடிமையான முரளி, தாய் பத்மினியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு கஞ்சா போதையில் பணம் கேட்டு தொந்தரவு செய்யவே, தர முடியாது என்று தாய் கூறி இருக்கிறார்.
இதனால் முரளி ஆவேசமடைந்து தாயை கண்மூடித்தனமாக தாக்கி, வயிற்றிலே மிதித்துள்ளான். அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பத்மினி, 'அடிக்காதே வயிறு வலிக்கிறது; எனக் கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார். ஆனால் கஞ்சா போதையில் இருந்த முரளி, தாய் என்றும் பாராமல் அருகில் இருந்த கட்டையை எடுத்து பத்மினியின் தலையிலே அடித்துள்ளார்.
அத்துடன் வலிதாங்க முடியாமல் பதமினி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையளித்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் முரளி மீது கொலை வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.