தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அத்திவரதர் தரிசனத்திற்கு சென்ற கர்ப்பிணிக்கு ஏற்பட்ட பிரசவ வலி!! கோவில் வளாகத்திலேயே கிடைத்த வரம்!!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது. மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். அந்த வகையில் சயன கோலம் முடிந்து நின்ற கோலம் கடந்த 1-ஆம் தேதி துவங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய திரண்ட வண்ணம் இருந்தனர். அத்திவரதர் தரிசனத்திற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து வந்து தரிசித்தனர்.
அத்திவரதர் வைபவத்தின் 45-ஆவது நாளான இன்று சுவாமி, ரோஜா நிற பட்டு உடுத்தி செண்பகப்பூ மற்றும் மல்லிகை மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இந்நிலையில் அத்திவரதரை தரிசனம் செய்ய நிறைமாத கர்ப்பிணியான விஜயா என்ற பெண் வந்துள்ளார். இந்நிலையில் தரிசனம் முடித்து வெளியே வந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து உடனடியாக விஜயா கோயில் வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுகப்பிரசவத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.