பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வீட்டருகே சூதாட்டம்., போலீசிடம் போன ஆட்டோ ஓட்டுனருக்கு அரிவாள் வெட்டு.. கர்ப்பிணியையும் விட்டுவைக்காத பயங்கரம்..!
காவல்துறையினருக்கு சூதாட்டம் குறித்து தெரிவித்த நபரை ஒருவர் வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் உள்ள சமத்துவ பெரியார் நகரில் வசித்து வருபவர் சக்தி. இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியில் மணிகண்டன் என்ற பழைய துணி வியாபாரம் செய்து வருபவரும் வசித்து வருகிறார்.
சம்பவதினத்தன்று ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவை கழுவிக்கொண்டிருந்தபோது, மதுபோதையில் வந்த மணிகண்டன் சக்தியுடன் தகராறில் ஈடுபட்ட நிலையில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்தியின் கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனை தடுக்க வந்த சக்தியின் மனைவி மற்றும் அவரது கர்ப்பிணி சகோதரியையும் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பீர்க்கண்காரணை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் மணிகண்டனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில் சக்தியின் வீட்டு அருகில் மணிகண்டன் தன் நண்பர்களுடன் சீட்டு விளையாடும் போது, அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இது குறித்து காவல்துறையினருக்கு அவர் தெரிவித்ததே இந்த பிரச்சனைக்கு முழுகாரணம் என்று தெரியவந்துள்ளது.