#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பிய கணவன்: மனைவியின் கூடா நட்பால் நடந்த விபரீதம்!
தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புறம் பாரதி நகரை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி பெயர் ஐஸ்வர்யா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். நடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சில நாட்களுக்கு முன்னர்தான் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் ஊர் திரும்பிய நடேசன் அங்கு ஒருசில வேலைகள் பார்ப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். அந்த நேரத்தில் தனது மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஐஸ்வர்யா வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஒரு மணியளவில் ஐஸ்வர்யாவின் தந்தை அவரை பார்ப்பதற்காக வீடிற்கு வந்துள்ளார்.
வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்த அவர் நேராக வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு அவரது மகள் ஐஸ்வர்யா இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பவ இடத்தை சோதனை செய்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவர் தான்தான் ஐஸ்வர்யாவை கொலை செய்ததாக போலீசாரிடம் சரணடைந்தார்.
அவரை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதில், நடேசன் வெளிநாட்டில் இருந்த நேரத்தில் ஐஸ்வர்யாவும், இளவரசனும் நெருங்கி பழகி வந்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய நடேசனுக்கு இந்த விவகாரம் தெரியவர தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் ஐஸ்வர்யா இளவரசனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளவரசன் தன்னுடன் பேசாத காரணத்தால் ஐஸ்வர்யாவை வெட்டி கொலை செய்துவிட்டு பிளேடால் தானும் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளவரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.