பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ATM உள்ள பணம் எடுக்குறேனு போனாரு.. ஆனால் ஆள் வெளில வரவே இல்ல.. உள்ள போய் பாத்தா விஷயமே வேற..
முதியவர் ஒருவர் மது போதையில் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி ATM இயந்திரத்தில் பணம் எடுக்க முயலும் வீடியோ ஒன்று இனையத்தில் வைரலாகிவருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் இயங்கிவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ATM மையத்திற்கு முதியவர் ஒருவர் மது போதையில் தள்ளாடியவாறே பணம் எடுக்க வந்துள்ளார். ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வரிசையில் கூட்டமாக நின்றுகொண்டிருந்த நிலையில், உள்ளே சென்ற முதியவர் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை.
முதியவர் பணம் எடுத்துவிட்டு வந்துவிடுவார் என வெளியில் இருந்தவர்களும் காத்திருந்த நிலையில், அவர் வெளியே வருவதாக இல்லை. இதனால் சந்தேகமடைந்த சிலர், ATM மையத்தின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், மதுபோதையில் உள்ளே சென்ற முதியவர், தன்னிடம் இருந்த வாக்காளர் அடையாள அட்டையை ATM இயந்திரத்தில் சொருகி பணம் எடுக்க முயன்றுள்ளார். பின்னர் அங்கிருந்த இளைஞர் இருவர் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து எப்படி இதில் பணம் எடுக்க முடியும் என கேள்வி எழுப்ப, இத்தனை வருடங்களாக இதை வைத்துதான் பணம் எடுத்துவருகிறேன் என அந்த முதியவர் கூறியுள்ளார்.
பின்னர் அவரை சமாதானம் செய்து வெளியே அனுப்பிய நிலையில், வெளியே சென்ற அவர், ATM இயந்திரம் வேலை செய்யவில்லை என அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு கிளம்பியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட, தற்போது அந்த வீடியோ காட்சி இணையாயத்தில் வைரலாகிவருகிறது.
Credits: www.polimernews.com