#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்னிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான தொகுதிகள் பாஜக அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி பின்தங்கியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி காட்சிகள் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான அதிமுக அணைத்து இடங்களிலும் பின்னடைவில் உள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பிரபல நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். மாவரைப்பது, குப்பை அள்ளுவது, சட்னி வைப்பது என வித்தியாசமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் மன்சூர் அலிகான்.
தற்பொழுது தேர்தல் முடிவுகள் நிலவரப்படி திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இவர் வாங்கிய ஓட்டுக்கள் 8792 வாக்குகள் ஆகும். இதில், திமுக 112582 வாக்குகளும், பாமக 31632 வாக்குகளும் பெற்றுள்ளது.