#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரம்! மன்சூர் அலிகானுக்கு நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அந்த தொகுதியில் களப் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்.
நடிகர் மன்சூர் அலிகான் பொதுமக்களுடன் இணைந்து வேலை செய்வது, ஊரைச் சுத்தம் செய்தல், கடைகளில் வியாபாரம் செய்வது என வித்தியாசமான முறைகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.
நேற்று காலை முதல் நிலக்கோட்டை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது கட்சியினர் மற்றும் பொதுமக்கள், மன்சூர் அலிகானை நிலக்கோட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.