#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை.. தற்போது ஜாமின் கிடைத்துள்ள பேரறிவாளனுக்கு திருமணம்.! அவரது தாயார் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், அவருக்கு உடனடியாக திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் மகன் சுதந்திரமாக நடமாடும் வகையில், ஜாமீன் வழங்க உதவிக்கரம் புரிந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறினார்.
எனது மகன் விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டவர். இப்போதைக்கு அதற்கான பொருளாதார வசதி இல்லை. வருங்காலத்தில் கண்டிப்பாக விவசாயத்தில் பேரறிவாளன் ஈடுபடுவார். 30 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு என் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு மற்றும் முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.