மாற்று திறனாளிக்கு சுயம்வரம் வந்தாச்சு...ஜூன் 4ஆம் தேதி முதல் தொடக்கம்.!



marriage-plans-for-phyically-disabled-people-commence-f

தமிழக முழுவதிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூன் நான்காம் தேதி முதல் சுயம்வரம் நிகழ்ச்சி நடத்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின்  கூட்டமைப்பு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை இணைந்து இந்த சுயம்வரம்  நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருக்கின்றன.

இந்த அறக்கட்டளை கடந்த 11 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கு  அறக்கட்டளை மூலமாக திருமணம் நடத்தி வைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பன்னிரெண்டாவது ஆண்டாக ஜூன் நான்காம் தேதி முதல்  அவர்களுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள 11 இடங்களில் நடைபெற இருக்கிறது.

Perambalur

இந்த சுயம்வரம் நிகழ்ச்சி ஜூன் நான்காம் தேதி திருவாரூரில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து  ஜூன் 18ஆம் தேதி கடலூரிலும் ஜூன் 25ஆம் தேதி கோவையிலும்  ஜூலை 2 ஆம் தேதி ஈரோடிலும் என மொத்தம் பதினோரு இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இறுதியாக ஆகஸ்ட் 13ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெறுகிறது.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு செப்டம்பர் மாதம்  ஒன்பதாம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். மருத்துவ கலந்தாய்விற்கு பின்னர் நவம்பர் மாதம் 19ஆம் தேதி அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் . மேலும் இதனைப் பற்றிய கூடுதல் தகவல்களை பெற tndfctrust.com  என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.