#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணமான அடுத்த நாளே மனைவி மாயம்.. காவல் நிலையத்தில் கண்ணீருடன் கணவன்.!
கோவையில் உள்ள கோட்டூர் பகுதியில் 21 வயதான இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த இளம்பெண் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இவர்கள் இருவரும் புது வீட்டிற்கு குடியேறியுள்ளனர். அடுத்த நாள் காலை இளம்பெண்ணின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இதனிடையே அந்த இளைஞர் வேலைக்கு சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் அவரது தாய் இருவரையும் காணவில்லை. இதனையடுத்து உடனடியாக கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் திருமணமான அடுத்த நாளே தனது மனைவியை அவரது பெற்றோர் கடத்திச் சென்றதாக புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த இளம் பெண்ணை அழைத்து விசாரணை செய்ததில், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், எனக்கு திருமணம் செய்த வாலிபருடன் வாழ இஷ்டமில்லை எனக்கூறி பெற்றோருடன் செல்கிறேன் என கூறியுள்ளார். இதனால், இளம்பெண்ணை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.