இறந்தபின்பும் ஆங்கிலேயர்களை அருகில் வருவதற்கே பயமூட்டிய இருவர்களின் நினைவு தினம் இன்று!
தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலை போராட்ட முன்னோடிகளில் குறிப்பிட்டத்தக்கவர்களான மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று.
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.
மருது சகோதரர்கள் துாக்கிலிடப்பட்டு பிணமாக கயிற்றில் தொங்கிய நிலையில்கூட ஆங்கிலேயர்கள் அவர்கள் அருகில் செல்ல அச்சமடைந்தனர் என்ற வரலாறும் உண்டு. அதற்கு காரணம், ஆங்கிலேயர்களுக்கு எந்த அளவுக்கு மருது சகோதரர்கள் மீது பயம் இருந்தது என்பதையே இது உணர்த்துகிறது.
இவர்கள் இருவரும் மிகச்சிறந்த போர்வீரர்களாகவும், வாள்வீச்சிலும் வல்லவர்களாக இருந்ததை பார்த்த வேலுநாச்சியார், சின்ன மருதுவிடம் போர்க்கலையை கற்றறிந்தார். 1772-ம் ஆண்டு காளையார் கோவிலில் நள்ளிரவில் சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை ஆங்கிலேயப் படையும், நவாப்பின் படையும் சதித்தீட்டம் தீட்டி கொலை செய்தது.
இதனையடுத்து வேலுநாச்சியாரை பெரிய மருதுவும், சின்ன மருதுவும் காப்பாற்றி மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் கொண்டு சேர்க்கின்றனர். பின்னர் சிவகங்கை சீமைக்கு திரும்பிய மருது சகோதரர்கள் மக்களோடு, மக்களாக வாழ்ந்து கொண்டே ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டும் பணியில் ஈடுபட்டு, எதிர்படைகளை வென்று 1780-ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர் மருது சகோதரர்கள்.
மருது சகோதரர்களை தன் படையால் மீட்கமுடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் அவர்களை பிடிக்க புது வியூகம் போட்டனர். அதில், மருதுசகோதரர்கள் சரணடையவில்லையென்றால் காளையார்கோவில் கோபுரம் இடித்து தரைமட்டம் ஆக்கப்படும் என அறிவித்தனர். இதனையடுத்து தாங்கள் ஆசை ஆசையாக கட்டிய கோவில் கோபுரம் இடிபடுவதை விரும்பாத மருதுசகோதரர்கள் சரணடைய முன்வந்தனர்.
அவர்களுடன் சேர்ந்து மருது பாண்டியர்கள் குடும்பத்தார்களும் கைது செய்யப்பட்டு திருப்பத்துார் அழைத்துவரப்பட்டு அங்கு அனைவரும் துாக்கிலிடப்பட்டனர்.