#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழகத்தில் அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்: 12 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி..போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!
பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகரில் உள்ள ரோசல்பட்டி பகுதியை சேர்ந்த செவிலியர் ஒருவரின் 17 வயது மகள், அங்குள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தாய் செவிலியர் என்பதால் வெளியூரில் தங்கி பணிபுரிந்து வந்தார். அதனால் தன் மகளை அவரது தாத்தா பாட்டியின் வீட்டில் தங்கி படிக்க வைத்தார்.
இந்த நிலையில், மாணவிக்கு கோவில்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரமேஷ் 19 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ரமேஷ் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமையை தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவி அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல்துறையினர் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.