பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"கட்டிப்பிடித்தார்; முத்தமிட்டார்" பெண்களுக்குள் வலுக்கும் MeToo விவகாரம்! மறுக்கும் ரஜினி பட நாயகி
பெண்கள் ஆண்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நிலையில், தற்போது ஒரு பெண் மற்றொரு பெண் மீது #MeToo மூலம் கூறிய பாலியல் புகார் இந்த அமைப்பை வேற பரிமாணத்திற்கு கொண்டுசென்றள்ளது.
தொடரி', 'வேலைக்காரன்', 'மகளிர் மட்டும்' உள்பட சில படங்களில் நடித்திருந்த மாயா கிருஷ்ணன், விரைவில் வெளியாகவிருக்கும் '2.0', 'துருவ நட்சத்திரம்' படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் மாயாவுடன் மேடை நாடகங்களில் இணைந்து நடித்த அனன்யா ராம்பிரசாத் என்கிற பெண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மாயா அவருடன் நெருங்கிப் பழகி பாலியல் தொல்லைகள் கொடுத்தாக புகார் அளித்தள்ளார்.
அனன்யா அந்த பதிவில் , மாயாவுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி, மாயாவால் அனன்யாவின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிபோனது, அனன்யாவை மாயா எப்படியெல்லாம் வசீகப்படுத்தி அவருடைய நண்பர்களிடமிருந்து பிரித்து அனன்யாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும், அவர்கள் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்திருந்த நிகழ்வுகள் பற்றியும் விவரித்துள்ளார்.
கடைசியில் ஒருநாள் மாயா அனன்யாவை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு, பின் மெதுவாக கழுத்தில், கண்ணத்தில் முத்தமிட்ட அவர் இன்னும் முன்னேறி செல்ல முயன்றதால் அனன்யா மிகுந்த பதட்டமடைந்து நடுங்கிவிட்டதாக அவரது பேஸ்புக் பதிவில் விவரித்திருந்தார். இப்போது அந்தப் பதிவை அவரே நீக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஒரு பெண் மற்றொரு பெண் மீது பாலியல் புகார் கூறியுள்ள இந்த விவகாரம் பெண்களுக்கு ஆதரவாக அமைக்கப்பட்ட #MeToo அமைப்பின் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனையடுத்து தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாருக்கு மறுப்பு தெரிவித்து மாயா தன் பேஸ்பக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் பொய்யானவை. என் மீது எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயார். இதனால் சட்டரீதியாக எடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்கும் நான் ஒத்துழைத்து உண்மையை வெளிக்கொண்டு வர தயார் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தன் மீது புகார் அளித்துள்ள அனன்யா மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.