#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சேர்ந்துவாழ மறுப்பு தெரிவித்த தனியார் பள்ளி ஆசிரியையின் கழுத்தை அறுத்த கணவன்.. நடுரோட்டில் பகீர் சம்பவம்.!
குடிகார கணவனால் தந்தை வீட்டில் வசித்து வந்த மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன், மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில், நல்லுச்சேரி கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சன் சத்தியசீலன். இவரின் மகன் விக்டர் வினோத் குமார் (வயது 35). இவரின் மனைவி புவனேஸ்வரி என்ற ஹேமா ஜூலியட் (வயது 37). விக்டர் மற்றும் ஹேமா காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
தம்பதிக்கு 9 வயதாகும் கேப்ரியல் பிரின்ஸ் என்ற மகனும், 6 வயதாகும் பெர்னிகா சஜன் என்ற மகளும் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையாக இருந்த ஜான்சன் சத்தியசீலன், தினமும் மதுபானம் அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வாடிக்கையாகியுள்ளது. இதனால் கடந்த 6 மாதமாக கணவரை பிரிந்த வாழ்ந்து வரும் ஹேமா ஜூலியட், கீழ்பாதி அருகே உள்ள தந்தை வீட்டில் இருக்கிறார்.
இவர், சங்கரன்பந்தல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்ததும் ஹேமா செம்பனார்கோவில் கடைவீதி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, முன்னதாகவே அங்கு காத்திருந்த விக்டர், மனைவியை சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதற்கு ஹேமா மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த விக்டர் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சம்பவம் நடந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த ஹேமா ஜூலியட் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக செம்பனார்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்டர் வினோத்குமாரை கைது செய்தனர்.