#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கார் - லாரி மோதி பயங்கர விபத்து.. அதிஷ்டவசமாக உயிர்பிழைத்த மதிமுக எம்.எல்.ஏ..!
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார். திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் வாசுவில் போட்டியிட்டு இவர் வெற்றி அடைந்தார். இவர் தனது காரில் தென்காசிக்கு சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, கடையநல்லூரை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில், நெல் மூட்டையை ஏற்றிக்கொண்டு லாரி பயணம் செய்துள்ளது. இந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற எம்.எல்.ஏ வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில், காரின் பின்புறம் சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார் நல்வாய்ப்பாக எவ்வித காயமும் இன்றி உயிர்பிழைத்தார். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.